மலையடிப்பட்டி மறைப்பணித்தளம்

MALAYADIPATTY MISSION

WELCOME TO OUR BEAUTIFUL HOME

 'கோவிலில்லா ஊரிலே குடியிருக்க வேண்டாம்' என்பது முதுமொழி - ஆனால் கோவில்களே ஓர் ஊராகிப் போன அபூர்வம் தான் மலையடிப்பட்டி. 

'விழாக்கள் மக்களை ஒன்றிணைக்கும்' - ஆனால் வாழ்வே விழாக்கோலம் பூணும் அதிசயம் தான் மலையடிப்பட்டி.

மூன்று நூற்றாண்டுகளின் பழமையில், பாரம்பரியமும், பெருமையும் விழைந்த பூமி - மனங்கள் மகிழும் மலையடிப்பட்டி !

Malayadipatty is not only a beautiful place of tourism, but also bears a rich historical heritage of four centuries, that we can not rule out its prominence in the Tamil Church History, especially of  Jesuit Missions of Trichy and Madurai.

வரலாற்றுப் பதிவுகள்

மலையடிப்பட்டி வரலாறு

மலையடிப்பட்டியின் வரலாற்றினைக் குறித்து அறிய, அக்காலகட்டத்தில் நிகழ்ந்த அரசியல் நகர்வுகளைக் குறிப்பிடுவது அவசியமாகிறது. 1659-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் இறுதியில் மைசூர்ப் படை திருச்சிராப்பள்ளியை முற்றுகையிடுவதற்காக வந்து கொண்டிருந்தன. மைசூர் மன்னர் கந்திவரன் 1656 -இல் மதுரை நாயக்கருக்கு எதிராகப் போர் தொடுக்க வந்தார். நீர் வளமும் நில வளமும் மிக்க சத்தியமங்கலத்தைக் கைப்பற்றி ஊர்ப்புறமெங்கிலும் கொள்ளையடித்துச் சூறையாடினர் படைவீரர்கள். இதனால் மறைப்பணித்தளத்திலுள்ள கிறிஸ்தவ மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்....மேலும் படிக்க >>>

வரலாற்றுச் சின்னங்கள்

மலையடிப்பட்டி மறைத்தலத்தின் பிற்கால வரலாறு குறித்து அறிய வேண்டுமெனில், அதனை இங்கு அமைந்துள்ள கோவில்களின் வரலாற்றுப் பின்னனியாகவே தொகுக்க இயலும். ஒவ்வொரு ஆலய, சிற்றாலய மற்றும் புராதான சின்னங்களின் வரலாற்றுப் பொதிவுகளும் தனித்தனி வலைப்பக்கங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. மேலும், சமகால வரலாற்று பதிவுகளும் அத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. இவற்றை அறிய அடுத்தடுத்த இணையப் பக்கங்களுக்குச் செல்லவும்…...மேலும் படிக்க >>> 

மலைத்தளிர்கள்

மலையடிப்பட்டி மறைத்தள வரலாற்றில் ஆலயங்களும், ஆன்மீகமும் செழித்து வளர்ந்ததைப் போன்று அழைத்தல் வாழ்வும் ஆலமரமாய் செழித்து வளர்ந்தது. இறையழத்தலை ஏற்று, மறைபணியாற்ற பல குடும்பங்களும் தங்கள் குழந்தைச் செல்வங்களை இறைவனுக்கு அர்ப்பணித்துள்ளனர்...மேலும் படிக்க >>>

 விழாக்கள்

வரைபடங்கள்